சீமான் மீது ஈரோட்டில் வழக்குப் பதிவு..!
கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு பரப்புரை கூட்டத்தில், வடமாநிலத்தவர் மீது வழக்குகளை போட்டு சிறையில் அடைப்பேன் என பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என பேசியதாக சீமான் மீது 153 (B) (c), 505(1) (c) ,506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இதே பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் குறித்து தவறாக பேசியதாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு வழக்கு சீமான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரச்சாந்த் கிஷோர், சீமான் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.