தமிழ்நாட்டின் முதுமலையில் எடுக்கப்பட்ட “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் விருது வென்றது.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
95வது அகாடெமி விருதுகளில், இந்த முறை உலகமெங்கும் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள படைப்புகளின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மூன்று திரைப்படங்களும் பங்கெடுக்கின்றன.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பரிந்துரையில் உள்ளது. ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதுக்கும் தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட ஃபீச்சருக்கான விருதுக்கும் பரிந்துரையில் உள்ளது.
இந்த விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் தீபிகா படுகோன், டுவைன் ஜான்சன், எமிலி பிளன்ட், மைக்கேல் பி ஜோர்டன், ஜொனாதன் மேஜர்ஸ், ரிஸ் அகமது போன்றோர் தொகுத்து வழங்குவார்கள்.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
சில நிமிடங்களுக்கு முன்பு, முதல்முறையாக அகாடெமி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 64 வயதான ஜேமி லீ கர்டிஸ் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். தனக்கு இந்த விருது கிடைத்ததன் பின்னணியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர்கள் குழுவில் அனைவருமே இந்த ஆஸ்கரை வென்றுள்ளோம்” என்று அவர் மகிழ்ச்சியுடன் சத்தமாகக் கூறினார்.
இத்தனை ஆண்டுகளாக நான் உருவாக்கிய அனைத்து வகை திரைப்படங்களையும் ஆதரித்த அனைவருக்கும் ஆயிரக்கணக்கனா, நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.
அதே திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை கீ ஹூ குவான் பெற்றார். அவருடைய உணர்ச்சிகரமான வெற்றி உரையில், “அம்மா, நான் ஆஸ்கரை வென்றுள்ளேன்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “என்னுடைய பயணம் படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில் ஓர் ஆண்டைக் கழித்தேன். இதைப் போன்ற கதைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.
அரங்கம் அதிர எழுந்த கரகோஷங்களைத் தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் அமெரிக்க கனவு,” என்றவர் தனது தாயாருக்கும் அவரது தியாகங்களுக்கும் தனது காதல் மனைவிக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
பாடகரும் பாடலாசிரியருமான கால பைரவா, இசையமைப்பாளர் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் டோல்பி திரையரங்கில் உள்ளார்கள். கோல்டன் குளோப்ஸில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது.
இந்திய மொழித் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான முதல் முழு நீளப் படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இதுகுறித்து உங்களுக்குத் தெரியாத ஒரு தகவல் உள்ளது.
நாட்டுக்கூத்து பாடலின் காணொளி யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அதிகாரபூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள்
தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் – ஒரு விருது (சிறந்த குறு ஆவணப்படம்)
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் – 2 விருதுகள் (சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை)
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட் – 2 விருதுகள் (ஒளிப்பதிவு, சர்வதேச முழுநீள திரைப்படம்)
தி வேல் – ஒரு விருது (சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்)
கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ – ஒரு விருது (சிறந்த அனிமேஷன் முழுநீள படம்)
ப்ளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர் – 1 விருது (ஆடை வடிவமைப்பு)
நல்வனி – ஒரு விருது (சிறந்த ஆவணப்படம்)