பரோட்டா சாப்பிட்ட பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தம்பி. இவரது மனைவி 68 வயதான ஜானகி. இவர் தனது வீட்டில் நேற்று காலை சாப்பாட்டிற்கு பரோட்டாவும் முட்டை கறியும் சமைத்துள்ளார். பின்னர், ஜானகி தனது கணவருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டுள்ளனர்.
ஜானகி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவரது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டது. அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஜானகி தவித்துள்ளார். இதனால் அவரால் முறையாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன கணவரும் உறவினர்களும் ஜானகியை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ஜானகியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஜானகியின் தொண்டையில் பரோட்டா சிக்கி அடைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். இந்த எதிர்பாராத மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.