யாழ் பிரபல நகைக்கடை உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் குறித்த நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை செய்துள்ளார்.
இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
குறித்த யுவதி இன்று மதியமளவில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவர் நகைக்கடையில் பணிபுரிந்தவர் என்றும் இன்று நகைக்கடைக்கு வரவில்லை என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்தது. இதையடுத்து மதியம் சுமார் 2 மணியளவில் வர்த்தகர் (நகைக்கடை உரிமையாளர்) தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றார். பின்னர் வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது மனைவி பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே வேளை குறித்த யுவதி தற்கொலை செய்தவுடன் நகைக்கடை முதலாளியை யுவதியின் உறவுகள் கடுமையான முறையில் அனுக முற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது தற்கொலை யாழ் நகர வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.