யாழ்.வாள்வெட்டுக் கும்பலின் 5 பேர் வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் கைது
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாள்வெட்டுக் கும்பலின் முக்கியஸ்தர்கள் எனக் கருதப்படும் 5 பேர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்பாளர்களைத் தாக்கி, தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், மோட்டார் சைக்கிள்களை திருடுதல், கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்துதல் போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த 05 சந்தேகநபர்களை, தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம், சந்தேகநபர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 03 மோட்டார் சைக்கிள்களை நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களையே போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.