ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது…!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து கியூல் நோக்கி சென்ற ரயிலில் தம்பதியினர் நள்ளிரவில் பயணித்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகரான முன்னா குமார் பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரை சிறைப்பிடித்தனர்.
இதனை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் சார்பஹ் நிலையத்தில் ரயில் நின்ற போது, டிக்கெட் பரிசோதகர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் முன்னா குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அது மட்டுமின்றி ரயிலில் பயணியிடம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட முன்னா குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவங்களை தொடர்ந்து, ரயிலில் டிக்கெட் பரிசோதகரே ஒழுங்கீன செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.