300ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டது.
திருகோணமலையில் இன்று மட்டும் 300ஏக்கர் காணி தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள மட்டக்களப்பு வீதியிலுள்ள கல்கண்ட எனும் கோயில் அண்மித்த பகுதியை சுற்றி பௌத்த பிக்கு குழு ஒன்று அடையாளப்படுத்தியுள்ளது,
இந்த செய்தியை தாங்கள் வெற்றிகரமாக 300ஏக்கர் காணியை பிடித்ததாக பெருமைப்பட்டுள்ளார்கள்.
முன்னைய யுத்த காலத்தில் நீர்பாசன குளங்களை கொண்டு குடியேற்ற திட்டங்களை விஸ்தரித்து கிழக்கு மாகாண இனவிகிதசாரத்தை மாற்றினார்கள் இதற்கு உதாரணம் சேருவில எனும் தனி பிரதேச செயலகம் சிங்களவருக்கு உருவாக்கப்பட்டது தற்போது மூதூர் கிழக்கிலுள்ள நீல பொல கிராமத்தையும் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே போன்று அம்பாரையிலும் அம்பாரை நகரை மூன்று பிரதேச செயலகமாக பிரித்து அதன் அருகிலுள்ள மொனறாகல ,பதுளை மாவட்டத்து சிறு சிங்கள கிராமங்களை கிழக்கு மாகாணத்தில் அம்பாரையில் சேர்த்து பதியந்தலாவ ,உகண எனும் புதிய பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் மட்டக்களப்பிலும் வெல்லாவெளியை மையப்படுத்தி காணி அபகரிக்கும் பணி தொடங்கியுள்ளார்கள்,.இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் புதிய விவசாய குடியேற்றம் எனும் பெயரில் உருவாகாமல் தமிழ் ,முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்களில் இடைப்பகுதியினூடாக தங்களுக்கு தேவையான காணிகளை பௌத்த வழிபாட்டு பண்டைய இடிபாடுகள் காணப்படுவதாக கூறி இரு இனத்தவரும் நடமாடாத மாதிரி திடிரென்று காணிகளை அடைக்கின்றார்.இனி அந்த காணி உரிமையாளர்கள் மரணிக்கும் வரை அந்தப்பக்கம் தலை காட்டமுடியாதாவாறு அச்சுறுத்துவார்கள்.