சஹாரானின் மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஹாரானின் மனைவி பாத்திமா ஹாதியா கடுமையான ஜாமீன் நிபந்தனைகளுடன் இன்று கல்முனை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
புலஸ்தீனி ராஜேந்திரன் என்றழைக்கப்படும் சாரா பற்றிய தகவல்களை மறைத்து ஈஸ்டர் தாக்குதல் நடத்த அனுமதித்த பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் பிணை கோரிக்கை உத்தரவை பிறப்பித்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர் மற்றும் பிணை வழங்குநர் இருவரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.