யாழ்.மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து வீடியோவாக விற்பனை செய்யும் கிரிமினல்களை கண்டுபிடிக்க போலீஸ் களத்தில்!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து வீடியோவாக விற்பனை செய்யும் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியவர்கள் 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களை என யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாண நகருக்கு வெளியில் உள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் செயற்படுவதாக மிகவும் இரகசிய தகவல் ஒன்றின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பணம் கொடுத்து ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சில மாணவர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் இந்த கும்பல் படம்பிடித்த பல காட்சிகள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உலா வருவதாக தகவல் கிடைத்துள்ளது.