கனடாவில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை.
கனடாவின் மேற்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மன்டன் நகரில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிகாரிகள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறும்போது, ‘உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
இதுதொடர்பாக எட்மண்டன் போலீஸ் சங்கத்தின் மைக்கேல் எலியட் கூறும்போது, ‘நகரின் வடக்கு மத்திய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியான இங்கிள்வுட் அருகே 2 அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்த தருணத்தில் அவர்களின் குடும்பத்தினர் சக ஊழியர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் முழு சேவையும், சமூகமும் துக்கத்தில் உள்ளது’ என்றார்.