கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்.
செம்மணிக்குள புனரமைப்பு, கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்
இருபாலைதெற்கு கமக்கார அமைப்பின் காலபோக பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் பொதுநோக்கு மண்டபத்தில்நடைபெற்றது.
கமக்கார அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரும்பிராய் கமநலசேவைகள் தினைக்கள அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி.மைதிலி ஜெயசுதன் அவர்களும் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.
செம்மணிக்குள புனரமைப்பு, கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல், போன்ற பல்வேறுவிடயங்கள் ஆராயப்பட்டது. விளைவிக்கப்படாத விளைநிலங்களை பண்படுத்தி விளைநிலமாக்குதல்,பிரதேசத்தில் உள்ள ஏனைய குளங்களையும் புனரமைத்தல்,வாய்க்கால்களை சீராக்குதல்,சிறுதானிய பயிர்ச்செய்கைகளை செய்வதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குதல்,விவசாய வீதிகளை புனரமைத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும் இவ்வருட செயற்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமது கமக்கார அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக செம்மணிக்குளம் தூர்வாரி புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.