பௌத்தமயமாக்கலை உடன் தடுத்துநிறுத்துங்கள்! – ஜனாதிபதிக்குச் சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்.

யாழ்., நெடுந்தீவு – வெடியரசன் ஆலயம் பௌத்தமயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தொல்பொருள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் இடங்களில் பௌத்த அடையாளங்களான விகாரைகளையும், புத்தர் சிலைகளையும், அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரப்புரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று எனப் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாடு தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.