திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.

கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.

மேலதிக செய்திகள்

இலங்கை செய்திகள்

நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

இலங்கையின் சில பகுதியில் சிறியளவில் நில அதிர்வுகள்

யாழில் நடைபெற்ற அழகி போட்டி


விளையாட்டு செய்திகள்

திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

உலக செய்திகள்

ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.

இந்திய செய்திகள்

ராகுல் காந்தியின் இல்லத்தில் குவிந்த டெல்லி காவல்துறையினர்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் – உயர்நீதிமன்றம்

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

காலையில் போலீஸ் , இரவில் கொள்ளையன் என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலர்!

English News

Bar Association’a Statement On Next IGP

‘Kailasa Has Not Deceived Anyone’

Call To Start Mangaluru To Rameswaram Train Soon

Migrant Deportation Plan: UK Minister In Rwanda

Leave A Reply

Your email address will not be published.