அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் மிக பெரிய அளவில், கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது.

இதன்படி, கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா,ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்து வருகிறது.

கடந்த 14-ந்தேதி குறுகிய தொலைவை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா செலுத்தியது. குறுகிய தொலைவில் சென்று இலக்கை தாக்க கூடிய அவை 620 கி.மீ. தொலைவுக்கு சென்றன என தெரிவிக்கப்பட்டது.

வடகொரிய ஏவுகணை பரிசோதனைபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பின்னர் கூறும்போது, வடகொரியா ஏவுகணை பரிசோதனை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதுபற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இந்த பரிசோதனையால் பாதிப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறினார். 2 ஏவுகணைகளும் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் விழவில்லை என கூறப்படுகிறது.

வடகொரியாவின் அதிரடிக்கு ஜப்பானும் தயாராகி வருகிறது என அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாஜூ மத்சுனோ கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியை தொடர்ந்து, அதனை படையெடுப்புக்கான ஒத்திகை என்று வடகொரியா கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என பார்க்கப்படுகிறது. எனினும், கூட்டு ராணுவ பயிற்சியானது தற்காப்புக்காக நடத்தப்படுகிறது என்று சியோல் மற்றும் வாஷிங்டன் கூறி வருகின்றன.

இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈடுபட, 8 லட்சம் மக்கள் வடகொரிய ராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர் என வடகொரியா கூறுகிறது.

அவர்களில் பலர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர் என வடகொரியாவின் ரோடங் சின்முன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ கூட்டு பயிற்சிக்கு பதிலடியாக கடந்த வியாழ கிழமை வடகொரியா, வாசாங்போ-17 என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியது.

இதனை வடகொரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவம் இணைந்து பெரிய அளவில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு, போரை தூண்டி விடும் வகையில், நடந்து கொள்வதற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையே இது என்று தனது ஏவுகணை பரிசோதனையை குறிப்பிட்டு உள்ளது.

மேலதிக செய்திகள்

இலங்கை செய்திகள்

நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

இலங்கையின் சில பகுதியில் சிறியளவில் நில அதிர்வுகள்

யாழில் நடைபெற்ற அழகி போட்டி


விளையாட்டு செய்திகள்

திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

உலக செய்திகள்

ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.

இந்திய செய்திகள்

ராகுல் காந்தியின் இல்லத்தில் குவிந்த டெல்லி காவல்துறையினர்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் – உயர்நீதிமன்றம்

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

காலையில் போலீஸ் , இரவில் கொள்ளையன் என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலர்!

English News

Bar Association’a Statement On Next IGP

‘Kailasa Has Not Deceived Anyone’

Call To Start Mangaluru To Rameswaram Train Soon

Migrant Deportation Plan: UK Minister In Rwanda

Leave A Reply

Your email address will not be published.