“நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு.
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு SSC மைதானத்தில் (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, கொழும்பு SSC மைதானத்தில் ஜனாதிபதி, போட்டியை நீண்ட நேரம் கண்டுகளித்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி அணிகளை ஊக்குவித்து, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இன்றைய போட்டி நிறைவின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரியின் அணிக்கு டி.எஸ். சேனநாயக்க நினைவுக் கேடயம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணியினருக்கும், திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, மைதானத்தில் கூடியிருந்த விளையாட்டு ரசிகர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடவும் மறக்கவில்லை.
மேலதிக செய்திகள்
இலங்கை செய்திகள்
நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு
இலங்கையின் சில பகுதியில் சிறியளவில் நில அதிர்வுகள்
விளையாட்டு செய்திகள்
திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.
தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.
உலக செய்திகள்
ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.
இந்திய செய்திகள்
ராகுல் காந்தியின் இல்லத்தில் குவிந்த டெல்லி காவல்துறையினர்!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் – உயர்நீதிமன்றம்
பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
காலையில் போலீஸ் , இரவில் கொள்ளையன் என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலர்!
English News
Bar Association’a Statement On Next IGP
‘Kailasa Has Not Deceived Anyone’