வாகன வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாப மரணம்!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சோக சம்பவம் சீதுவ – கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 45 வயதுடைய தந்தையும், 14 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.