உள்ளூராட்சி மன்றத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீட்டிக்கும் மொட்டின் முயற்சி!
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் நீடிப்பதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான பணம் வழங்கக்கூடிய காலகட்டத்தை நிதியமைச்சின் செயலாளர் கூறினால், அதுவரை உள்ளூராட்சி காலத்தை அதற்கு பொறுப்பான அமைச்சருக்கு நீடிக்க சட்ட விதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னர், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் , மொட்டின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் மேயர்களை நெலும் மாவத்தை கட்சி தலைமையகத்திற்கு அழைத்து , உள்ளூராட்சி பதவி காலத்தை ஆறு மாதங்களுக்கு நீடிக்க முடிந்தால் சம்பளம் இல்லாமல் மொட்டில் உள்ளோரால் பணியாற்ற முடியுமா என்று கேட்டுள்ளார்.
அங்கு வந்த அனைத்து உள்ளூராட்சி பிரதிநிதிகளும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏகமனதாக பிரேரணைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
பின்னர் கடந்த வாரம் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பொஹொட்டுவ தலைவர்கள் உள்ளுராட்சி அதிகாரிகளின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அரசியலமைப்பு ரீதியாக அதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் உள்ளுராட்சி மன்றங்களை ஆணையாளர்களிடம் ஒப்படைக்காமல், தற்போதைய நிலைமையை ஏற்று வாக்கெடுப்பை நடத்துவது நீண்டகால அடிப்படையில் முக்கியமானது என பொஹொட்டு முக்கியஸ்தர்கள் கருதுவதாக தெரிகிறது.