சென்னையில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை..

சென்னை முதல் நாகப்பட்டினம் வரை கடலோர பகுதிகளிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
வரும் மணி நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய வெப்பச்சலன ஆலங்கட்டி மழை பதிவாகும்.
மழைக்கு முன்பு தரைக்காற்றும், மழையின் போது இடி,மின்னலும் பரவலாக காணப்படும்.