ஐ.நா.எச்சரிக்கை – 4 நாடுகளில் பஞ்ச அபாயம்
போரால்,வன் முறையால் பாதிக்கப்பட்ட 4 நாடுகளில் பஞ்சம் ஏற்பட அபாயம் உள்ளதாக ஐ.நா சபை பொதுச் செயலாளர் குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கோ, ஏமன், தெற்கு சூடான் மற்றும் வடகிழக்கு நைஜீரியா ஆகிய 4 நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரேஸ், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் உறுப்பினர்களுக்கு இது குறித்துக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவிப்பதாவது, உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமன், காங்கோ, வடகிழக்கு நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய உணவு நெருக்கடிக்கு ஆளாகக்கூடும் என பகுப்பாய்வு தெரிவித்தது. ஆனால் அந்நாடுகளுக்கு உதவுவதற்கான நிதியும் குறைவாக உள்ளது.
இந்த நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயத்துடன் லட்சக் கணக்கானோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் மற்றும் தொடர்புடைய வன்முறைகளைத் தாங்கி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஏமன், வடகிழக்கு நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் மக்கள் பஞ்ச ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
அவசரகால நடவடிக்கைகளில் இருந்த சிக்கல்களை பற்றி ஐ.நா மனிதாபிமான நடவடிக்கை பிரிவு தலைவர் மார்க் லோகாக் கூறும்போது, மனிதாபிமான நடவடிக்கைகள் தாமதப்படுத்தப் படுகின்றன. உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதில் இருந்து தடுக்கப்படுகின்றன. அந்த பொருட்களை எடுத்து செல்பவர்களும் தாக்கப்படுகின்றனர். நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதிலும் தாமதப்படுத்தப்படுகின்றன என்றார்.
பாதிக்கப்பட்ட நாடுகளில் “இப்போது இயற்கை பேரழிவுகள், பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் பொது சுகாதார நெருக்கடிகளால் மிகவும் மோசமடைந்துள்ளது, இவை அனைத்தும் கொரோனா தொற்றுநோயால் மேலும் அதிகரித்து உள்ளது . அவற்றில் பல விஷயங்கள், கொரோனாவின் விளைவுகள் – பொருளாதார சுருக்கம், அடிப்படை பொது சேவைகளின் குறைந்து வருவது போன்றவை ஆகும்,