ஓற்றுமையாகவே இருக்கிறோம் – மாவை
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் எழுந்த விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு இனத்தின் விடுதலைக்காக ஒற்றுமையாக செயற்பட்டு வருகிறோம் என இதமலங்கல ழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
சிறுப்பிட்டியில் சுமந்திரனின் நன்றிதெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஐனநாயக பலம் கொண்ட இந்த நாட்டை சர்வதிகாரம் கொண்ட இராணுவ நாடாக மாற்ற நாம் ஒருபோதும் இடமளியோம். அதனை ஏற்கவும் முடியாது. தேசிய ரீதியாகவும்,சர்வதேச ரீதியாகவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
சர்வதிகார ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கின்ற பிளவுகள் நீக்கப்பட்டு ஒன்றாக செல்ல வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்றார்.