டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு – சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்.

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இரவு 10.22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லி அருகே உள்ள காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.