யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய உதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழில் அமைச்சர் எல்.முருகன் கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது யாழ்.பல்கலைக்கழக மாணவர் நல்வாழ்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையின் பலனாக இந்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறும் 100 மாணவர்களுக்கு பட்டப் படிப்பு முடியும் வரை நிதியுதவி வழங்கப்படும்.