இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பாலியல் வன்கொடுமை
பத்தனம்திட்டா: கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில், கொரோனா நோயாளியான 20 வயது இளம் பெண், வீட்டிலிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்; அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயம்குளம் பூர்வீகமாக கொண்ட நைஃபல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு நடந்துள்ளது. கோவிட் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண்ணுடன் ஆம்புலன்சில் 40 வயது பெண் ஒருவரும் இருந்துள்ளார். அவரை கோழஞ்சேரியில் உள்ள பொது மருத்துவமனையில் இறக்கி விட்ட பின்னர் இளம் பெண்ணை பந்தளத்திற்கு தனியாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அடூரிலிருந்து பந்தளம் அடைய எளிதான வழி இருந்தும், திட்டமிட்டே சுற்று வழி; கோசஞ்சேரி வழியாக பயணிக்க வைத்துள்ளார் டிரைவர். ஆரண்முளா விமான நிலைய திட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஒரு திறந்த மைதானத்தில் வைத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அலங்கோலமாக கோவிட் மையம் வந்து அடைந்த இளம் பெண், மருத்துவமனை நிர்வாகிகளுக்கு தான் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதை பற்றி தகவல் கொடுத்துள்ளார்
இளம் பெண்ணின் பெற்றோருக்கு கோவிட் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இளம் பெண் ஒரு உறவினரின் வீட்டில் தனிமைப்படுத்தலில்இருந்துள்ளார். பரிசோதனையில் இளம் பெண்ணுக்கும் கோவிட் பாசிட்டிவ் இருப்பது தெரிந்து. அடூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் பந்தளத்திற்கு கொண்டு செல்லப்படுகையில் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
பெண் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் என்பதால், இவரது குற்றப் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டிரைவர் திருமணம் ஆகி ஒரு குழந்தையின் தகப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்சில், கொரோனா நோயாளியுடன் ஒரு சுகாதார பணியாளர் செல்ல வேண்டும் என்ற அரசின் பரிந்துரை இருந்த நிலையில் இரவில் நோயாளிகளை தனியாக அழைத்து சென்றதின் காரணத்தை விசாரித்து வருகின்றனர். இதில் சுகாதாரத் துறையின் பொறுப்பின்மை இருக்கிறதா என்பதை பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் ஆகஸ்து 5 அன்று மறைவி நோயுள்ள 75 வயது பெண்ணுக்கு புகையிலை தருவதாக வாக்கு உறுதியளிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 வயதுள்ள பெண் உட்பட மூன்று பேரை கைது செய்திருந்தனர். இப்படியாக தெய்வத்தின் தேசம் என்று அறியப்பட்ட கேரளம் கொடூர குற்றவாளிகளின் தேசமாக மாறுவதாக தெரிகிறது.