தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு.

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கமானது தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.