கோட்டா கோ கமவின் முதல் குடிலை அமைத்தது ஐதேகவே : விமல் வீரவங்ச (வீடியோ)
கோட்டா கோ கமவின் முதல் குடிலை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசு மாரசிங்கவே அடித்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட சபை உறுப்பினருமான விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த குடிசைகளுக்கு என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது எனவும் வீரவங்ச மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து டெலிகொம் மற்றும் சிலோன் வைத்தியசாலையை விற்க முயல்வதாகவும், இந்தக் குற்றச் செயலுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் வீரவன்ச எம்.பி வலியுறுத்தினார்.
“மத்திய வங்கியை சுதந்திரமாக்குவது என்பது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகும்.”
மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் இதயம் எனவும், எவருக்கும் பொறுப்புக் கூற முடியாத அதிகாரிகள் குழுவினால் மாத்திரம் அதனை கட்டுப்படுத்த அனுமதிப்பது நாட்டில் குழப்பமான விடயம் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின்படி கிரீஸ் இதேபோன்ற நடவடிக்கைகளை பின்பற்றி ஒரு பெரிய மனித அவலத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் பாதிப்பு மிகவும் பெரியது என்றும் IMF கிரீஸ் மக்களிடம் தான் செய்த குற்றங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.