அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார். (Video)

நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று(மார்ச் 24) காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.