துருக்கியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 7 மாடிகளை கொண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது.
இதைதொடர்ந்து ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கோர விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.