பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத காலம் பதவி நீடிப்பு!

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மூன்று மாத காலம் பதவி நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் அடுத்த பொலிஸ்மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டது.
எனவே, தற்போதைய பொலிஸ்மா அதிபருக்குத் தற்காலிக பதவி நீடிப்பை வழங்குவதற்கும், அதன்பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.