நடிகர் சமுத்திரக்கனி இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா..

தென்னந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சமுத்திரக்கனி.
சுப்பிரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய இவருடைய திரை பயணம் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 வரை வந்துள்ளது.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். நடிகராக மட்டுமின்றி ஒரு இயக்குனராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது பவன் கல்யானை வைத்து வினோதய சித்தம் படத்தை ரீமேக் செய்து வருகிறார். வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் பல சீரியல்களை இயக்கியுள்ளார்.
சீரியலில் சமுத்திரக்கனி
அப்படி இவர் இயக்கிய சீரியல் தான் ரமணி Vs ரமணி பார்ட் 2. இந்த சீரியலில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.