பட்டதாரி யுவதி வெட்டிக்கொலை! கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட உடல்

பட்டதாரி யுவதி ஒருவர் இரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொழில் நிமிர்த்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலம் ஒன்றுக்கு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரத்னபுர, நிரியெல்ல பிரதேசத்தில் யுவதியொருவரின் மர்ம மரணம் இன்று (27) காலை பதிவாகியுள்ளது.
காலையில் வேலைக்குச் சென்ற அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் தேடிய போது , வீட்டின் அருகே உள்ள கால்வாயில் புதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
6.35 பேருந்தை பிடிக்க 6.20க்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அந்த பதினைந்து நிமிடங்களில்தான் இக் கொலை நடந்துள்ளது என ஊகிக்கப்படுகிறது.
அவரை கொலை செய்து கால்வாயில் கொண்டு சென்று வீசியது யார் என்பது இன்னும் தெரியவரவில்லை.
இரத்தினபுரி நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சசினி ஜினாதாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்துவிட்டு ஹிதெல்லன பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர், திருமணம் செய்ய எதிர்பார்த்திருந்த நிலையில், சம்பவத்தன்று காலை 6.20-6.35க்கு இடையில் காதலனுடன் தொலைபேசியில் பேச முயற்சித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக காதலன் அவரது அழைப்பைத் தவறவிட்டுள்ளார்.
அவர் ஏதோ பிரச்சனையில் இருந்த போது அவர் தொலைபேசி அழைப்பை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
பின்னர் காலையில் சசினிக்கு தொடர்ந்து போன் செய்தும் அவர் பதிலளிக்காததால் , சசினி குறித்து எந்த தகவலும் இல்லாததால் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்த, குடும்பத்தினரும் உறவினர்களும் இணைந்து தேடிய போதே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சசினி தனது வீட்டை ஒட்டிய கால்வாயில் மூழ்கி இருந்ததால், அவர் எப்படி அங்கு கொண்டு சென்று வீசப்பட்டார் என்பது குறித்து போலீசார் சிறப்பு விசாரணை நடத்தினர். போலீஸ் நாயும் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டது.
இறந்த சசினி மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகள் என்பது குறிப்பிடத் தக்கது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இரத்தினபுரி மற்றும் அலபாத்த பொலிஸ் நிலையங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.