எரிபொருள் தட்டுப்பாடு இல்லை… எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்க வேண்டாம் :அரசு தரப்பு
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதுடன், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளதால், அச்சமடைய வேண்டாம் என , எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் திரளும் மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் விநியோகம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களை கடமைக்கு வரவிடாமல் பலவந்தமாக தடுத்த தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஒருவரால் இன்று மாலை தாமதமான எரிபொருள் விநியோகம் , மீண்டும் பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய சேமிப்பு முனையங்களுக்கும் , விநியோகத்தின் போது தேவையான பாதுகாப்பு ஆயுதப்படை மற்றும் பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Request the public not to panic over shortages in fuel supply. There’s adequate stocks of fuel in the country & distribution will continue. Fuel distribution that was earlier delayed due to trade union activist forcibly preventing employees from attending to their duties have…
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 28, 2023