போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு விசேட கலந்துரையாடலொன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாணவர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பிலும், பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு எஸ்.ஜெயகாந்த் தலைமையில் விவாதிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் போதைப்பொருளிற்கு அதிகளவு அடிமையாவதனை தடுப்பதற்கு பொலிஸ் நிலையமூடாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த விசேட கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி M.கெங்காதீஸ்வரன், வைத்தியர் சத்தியரூபன், சமுர்த்தி முகாமையாளர், நிர்வாக கிராம அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுக ஆர்வலர்கள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.