கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் அரசமானிய அரிசி விநியோகத் திட்டம் முன்னெடுப்பு!
பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு கொள்வனவு செய்து, அதனை அரிசியாக்கி வறிய குடும்பங்களுக்கு வழங்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள சமுர்த்தி பெறும் குடும்பங்கள் 436 பேருக்கு இன்று(30) பத்து கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இதேவேளை, மலையாளபுரம் கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி மற்றும் சமுர்த்திக்காக காத்திருக்கும் 600பேருக்கும் இன்றைய தினம் பத்துக்கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது.
குறித்த அரிசி வழங்கும் செயற்பாடு கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரால் முன்னெடுக்கப்பட்டது.