கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நட்சத்திர ஹோட்டல் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை, தான் தங்கியிருந்த கண்டி நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் சறுக்கி விழுந்து ,கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதுடைய யோர்க் சீமர்ஸ் (Jorg Siemers ) கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பத்து வயது மகனுடன் இலங்கைக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியர்,ஜேர்மன் பிரஜையின் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜேர்மன் தூதரகத்திற்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.