யாழில் தந்தை செல்வாவுக்குத் தமிழரசின் பிரமுகர்கள் அஞ்சலி!

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 125 ஆவது ஜயந்தி தினமான இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது நினைவுத்தூபியில் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் நினைவிடத்தில் உள்ள தந்தையின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் சமாதியில் மலரஞ்சலி செலுத்தினர்.