விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.
நாடு முழுவதும் சென்று மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும் விமானப்படையின் “ஹெரலி பெரலி” வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பலா சார்ந்த உற்பத்திகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் மாத்திரம் 70 ஆயிரம் பலாமரக் கன்றுகளை நடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
“விமானப்படை ஹெரலி பெரலி” என்ற பெயரில் பலாமரக் கன்றுகள் தொடர்பில் எழுதப்பட்ட நூலின் பிரதியொன்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
“விமானப்படை ஹெரலி பெரலி” என்னும் நூலில் பலாமரக் கன்றுகளின் நடுகை மற்றும் அதனை சார்ந்த உற்பத்திகள் பற்றிய உள்ளீடுகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.