கொழும்புக்கு நில அதிர்வு அபாயம் – பேராசிரியர் அத்துல சேனாரத்ன

கொழும்பிற்கு மேற்கே ஆழமான கடற்பரப்பில் பாரிய விரிசல்… கொழும்புக்கு நில அதிர்வு அபாயம்
பேருவளை நில அதிர்வை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…
– பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரிக்கை!
கொழும்பின் மேற்குப் பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படக் கூடும் எனவும் , அதிக மக்கள் தொகை செறிவு உள்ள கொழும்புக்கு அருகில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் மேற்கு நோக்கிய ஆழ்கடல் பகுதியில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர், மேல் மாகாணத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முறையாக ஆராயப்பட வேண்டும் என்றார் அவர்.
பேருவளை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாமல், முறையான பரிசீலனைகளை மேற்கொண்டு, நில அதிர்வுகளுக்கான பிரதான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டியது அவசரமும் , அவசியமுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பைச் சுற்றி நில அதிர்வு அளவிகளை பொருத்தி அதன் மூலம் பெறப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நில அதிர்வுக்கான முக்கிய காரணங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.