காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற வாகனம்.
ஒமந்தை காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற டட்டா ரக வாகனம்
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட காட்டுப்பகுதியில் நேற்று காலை தனிமையில் நின்ற டட்டா ரக வாகனத்தினை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பாலமோட்டை – ஈச்சங்குளம் பிரதான வீதியின் காட்டுப்பகுதியில் பல மணி நேரமாக டட்டா ரக வாகனம் தனிமையில் நிற்பதாக பொதுமகனோருவர் ஒமந்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் அவர்களுக்கு தகவல் வழங்கியிருந்தார்.
குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் டட்டா ரக வாகனம் நின்ற காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் டட்டா ரக வாகனத்தினை ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
மரம் கடத்தலுக்கு குறித்த வாகனத்தினை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை அறிவதற்குரிய நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.