உயிர் ஊசலாடிய 1990 தப்பி பிழைத்தது!
105 சுவசரிய ஆம்புலன்ஸ் சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு தனியார் துறை நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், இவ்வருடம் 525 மில்லியன் ரூபாவை செலவிட அவர்கள் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நோயாளர் காவு வண்டிகளுக்காக ஜோன் கீல்ஸ் நிறுவனம் அதிகளவு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அந்த தொகை 100 மில்லியன் ரூபா எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
1990 சுவாசர்ய ஆம்புலன்ஸ் சேவையை பராமரிப்பது அரசாங்கத்திற்கு கடினமாக இருப்பதால், அச் சேவையைத் தொடர தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் ஆதரவைக் கேட்டு சமீபத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
அம்புலன்ஸ் ஒன்றுக்காக 5 மில்லியன் ரூபா தேவை என அறிவித்திருந்த நிலையில், அதற்கு துவையான நிதியை கொடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் 525 மில்லியன் ரூபாவை அம்புலன்ஸ்களுக்காக வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்த தொகையை சில வாரங்களுக்குள் வசூலிப்பது ஒருவகையில் கிடைத்த வெற்றியே என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.