பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தால் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கின்றது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்ட யோசனையில் ‘பயங்கரவாதம்’ என்ற வார்த்தைக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த வரையறையின் மூலம், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சாத்தியம் உள்ளது என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொது, சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.