கிறிஸ்தவ ஆலயங்களில் ‘புனித வெள்ளி’ சிறப்பு ஆராதனை.

ஏசு கிறிஸ்து உலக மக்களின் நன்மைக்காக பாடு அனுபவிக்கிற இந்த நாட்களை புனித வாரம் என்று அழைப்பார்கள். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நாட்களாக இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி வியாகுல வியாழன் ஏசுவின் கடைசி பஸ்கா ஆசரிப்பின் நாளில் பல சம்பவங்கள் நடந்தன. அதன்படி பஸ்கா ஆசரிப்புக்கான ஆயத்தம், சாயங்காலத்தில் ஏசு 12 சீடர்களுடன் பந்தி அமர்ந்து சீசர்களின் கால்களை கழுவியது. யூதாஸ் காட்டி கொடுக்க ஆயத்தமானது. மேலும்`நான் உங்களின் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்’ என ஏசு சீடர்களுக்கு கட்டளையிட்டார்.

இந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் `பெரிய வியாழன்’ அனுசரிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சபை மக்களின் கால்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அதே போல சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளிலும் பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருவிருந்து ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஏசுவை சிலுவையில் ஏற்றிய நிகழ்வை நினைவு கூரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) `புனித வெள்ளி’ சிறப்பு ஆராதனை நடக்கிறது.இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இன்று முழுவதும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து சிறப்பு ஆராதனையில் கலந்து கொள்வர்.

புனித வெள்ளியையொட்டி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது 7 வார்த்தைகளை சொல்வார். அந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக தியானிக்கும் வகையில் இந்த ஆராதனை நடப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

Leave A Reply

Your email address will not be published.