இந்தியாவில் திருச்சி உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து 07 பேர் விடுதலை
இந்தியாவில் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 81 இலங்கை அகதிகளில் 7 பேர் நேற்று (06) விடுவிக்கப்பட்டு வழக்கமான முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
2000 ஆம் ஆண்டு முதல், வடக்கில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற தமிழ் அகதிகளில் கிரிமினல் குற்ற சந்தேகத்தின் பேரில் , குறிப்பிட்ட பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் இலங்கையர்கள்.
அவர்களில் 7 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேந்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொது முகாமுக்கு அனுப்பப்பட்ட ஏழு பேருக்கும் அவர்களது உறவினர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.