5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது லக்னோ.
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேற்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராகுல் திரிபாதி 35 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உள்பட 21 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னில் அவுட்டானார்.
லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ரன்னிலும், தீபக் ஹூடா ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் கே.எல்.ராகுல் 35 ரன்னுடன் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.