இரத்தக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க இளைஞரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.