மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (7) காலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என்.நாகரெட்னம் மாகாண நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் வி.ராஜகோபாலசிங்கம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் நவரூபரஞ்சணி மற்றும் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரசாங்க வங்கிகளினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்ற விவசாய கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் விவசாயிகளுக்கான விசேட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விவசாகள் நெற்செய்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று உப பயிர்செய்கைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் எனவும் சேதன பசளைகளை அதிகளவாக பாவனைக்கு கொண்டுவரவேண்டும் எனவும் இரசாயன பசளைகள் பயன்பாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்தாக்கம் பற்றி விவசாயிகளை விழிப்படைய செய்யவேண்டும் என அரசாங்க அதிபர் சகலரையும் வேண்டிக்கொண்டார்.
சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாகவு ஆராயப்பட்டது அரசாங்க அதிபரினால் எடுக்கப்பட்ட தீர் மானங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது அதற்கு மேலதிகமாக வனபாதுகாப்பு திணைக்களத்திம் தங்களின் வனப்பகுதிகளில் மாவட்ட நிவாகத்திற்கு எவ்விதமான தொடர்பும் இல்லாத வகையில் தன்னிச்சையாக செயல்பட்டு மண் அனுமதியினை வழங்கி வருகின்றனர் இம் முறையானது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலை உருவாக்கிவருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க்ப்படவுள்ளது.
நீர் முகாமைத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டபோது தற்போது குளங்களில் கானப்படுகின்ற நீரின் அளவானது 25வீதமான அளவாகும் எதிர்காலத்தில் மழைகாலம் ஆரம்பிக்க போதியளவான நீர் கிடைக்கும் என பணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.