தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நபர் உயிரிழப்பு.

நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 56 வயதுடைய நபர் உயிரிழப்பு.
நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த இன்று டுபாய் நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கடந்த இன்று நாடு திரும்பியுள்ளார்.