நைஜீரியாவில் மர்ம கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு- 50 பேர் பலி.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.
சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.