ரஜினிகாந்த் ஆசியுடன் தொடங்கிய நயன்தாரா படப்பிடிப்பு.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நயன்தாரா -75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நயன்தாரா -75 படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.