இந்திய மருந்துகளை இறக்குமதி செய்யும் சுகாதார அமைச்சகத்தின் சட்டவிரோத முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை.
இந்திய கடன் சலுகையின் கீழ் தனியார் இந்திய சப்ளையரிடமிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யும் சுகாதார அமைச்சகத்தின் முடிவை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இடைநிறுத்தியுள்ளது.
Savorite Pharmaceuticals (Pvt) நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து பலத்த சந்தேகம் இருப்பதாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதேபோல், இந்திய தனியார் நிறுவனங்களான Savorit மற்றும் Kausikh Therapeutics (P) Limited (KTL) ஒழுங்குமுறை மேற்பார்வையை மீறி மருந்துகளை வாங்கும் சுகாதார அமைச்சகத்தின் முடிவுக்கு எதிராக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அளித்துள்ள புகாரை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிபதி முர்து என்.பி பெர்னாண்டோ, நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். ஒப்பந்தத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்தும் கேள்விகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் , கொள்முதல் போன்றவற்றை சட்டப்பூர்வமாக நிரூபிக்காமல், சவோரிட்டிலிருந்து எதிர்காலத்தில் மருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.