யாழ்ப்பாணம் உரும்பிராயில் கோரவிபத்து

யாழ் உரும்பிராய்-கோப்பாய் வீதியில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நேருக்கு நேராக வந்த இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர், காயமடைந்துள்ளதுடன் அவர்கள் பயணித்த இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறனர்